தேனி, திண்டுக்கல், மூணாறு, இடுக்கி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் ஏலக்காய், காபி, மிளகு, தேயிலை, கிராம்பு, கோகோ, பூண்டு மற்றும் மல்லிகை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க தேனி சமூக மற்றும் தொண்டு அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எஸ்.கருப்பையா, அவதார் பெட்ரோ கெமிக்கல்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனர் சதீஷ்ராஜா கருப்பையா ஆகியோர் உறுதிமொழி எடுத்தனர்.
இந்த சங்கம், தேனி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பணப் பயிர்களை ரிக்சந்தைக்கு அனுப்பி ஏற்றுமதி செய்வதன் மூலம் மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்கிறது. மேலும் இயற்கையை பாதுகாக்கவும், மாசுபாடுகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன்படி உள்ளூர் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, பூஜ்ஜிய திரவ வெளியேற்றம், மியாவாகி வன மேம்பாடு, ஆட்டோமொபைல் துறை ஈடுபாடு, அபாயகரமான கழிவுகளை முன்கூட்டியே அகற்றுவ தற்கான ஒப்பந்தங்கள், கல்வித் தொடர்பு, அங்கீகாரம் மற்றும் உந்துதல் திட்டங்கள் உள்ளிட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றனர் .
இதன்மூலம் அபாயகரமான கழிவுகள் ஊடுருவலை தடுத்து தன்னிறைவு பெற்ற விவசாய பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வேலைவாய்ப்பை இணைத்து நிலையான வாழ்வா தாரங்களை உருவாக்குகிறது. மேலும் சுற்றுச்சூழல், சமூக விழிப்புணர்வு மற்றும் உரிமையை மேம்படுத்த
தொழில்துறையின் கலாசாரத்தை வளர்ப்பது ஆகிய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவதார் பெட்ரோ, தென்னிந்தியாவின் பசுமை பகுதியின் சுற்றுச்சூழல் புனிதத்தைப் பாதுகாக்கிறது. மேலும் மசகுஎண்ணெய் மற்றும் எரிபொருள் துறையில் சமூக ஒருங்கிணைந்த நிலைத்தன்மையை உருவாக்குகிறது.
